நிகழ்ச்சி தொகுப்பாளர் கொலை..!திடுக்கிட வைக்கும் பின்னனி சம்பவம்…!

Default Image

தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரான அனிதா சிங் என்ற இளம் பெண்ணை அவரது கணவரே கொலை செய்து உடலை எரித்தது கொடூரமாக கொன்றுள்ளார்.இதனை அடுத்து அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளவர் அனிதா சிங் என்ற இளம் பெண்.இவரை அவரது கணவரே கொலை செய்து உடலை எரித்ததாக கைது செய்யப்பட்டு உள்ளார்.இந்நிலையில் தீயில் கருகி உருக்குலைந்த நிலையில் கிடந்த அப்பெண்ணின் உடலை நைனிடால் பகுதியில் இருந்து போலீசார் மீட்டுள்ளனர்.

இந்த கொலை குறித்த பின்னனி:

தொலைக்காட்சி தொக்குப்பாளியான 29 வயது நிரம்பிய அனிதா என்பவர்  மற்றோருவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாகவும் இதனை  அவருடைய கணவர் ரவீந்தர் பால் சிங் சந்தேகித்தாக கூறப்படுகிறது.இதனால் கடந்த மாதம் 30ம் தேதி தனது மனைவியை நைனிடாலில் உள்ள நண்பர் குல்தீப் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு உணவில் அவருக்கு மயக்க மருந்தை கலந்து கொடுத்து உள்ளார் கணவர்.இதன் பின்னர்  நண்பனின் உதவியோடு கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின் இருவரும் நள்ளிரவில் உடலை காட்டுக்கு கொண்டு சென்று எரித்து விட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்