மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விலங்குகளின் சரணாலயம் திறப்பு.!
மேற்கு வங்கத்தில் விலங்குகளின் சரணாலயங்களை செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும்.
மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விலங்குகளின் சரணாலயங்கள் திறக்கப்படும் என்று வனத்துறையனர் நேற்று தெரிவித்தனர்.
பண்டிகை காலத்திற்கு முன்னதாக சரணாலத்தை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சரணாலங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை வனத்துறை விகாந்த் சின்ஹா தெரிவித்தார்.
அந்த வகையில், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என்றும், இன்று நடைபெறும் கூட்டத்தில் இது குறித்து முழுமையான விவரங்களுக்கு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், பண்டிகை காலங்களில் சுற்றுலாப்பயணிகளுக்காக சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்களை திறப்பதற்கான வழிமுறைகளை வெளியிட அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பானர்ஜி கூறியது குறிப்பிடதக்கது.