கேரள காங்கிரஸ் சமூக வலைதள பொறுப்பாளராக பதவியில் இருந்த அனில் ஆண்டனி, காங்கிரஸில் இருந்து விலகுவதாக டிவிட்டரில் அறிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குஜராத் கலவரம் தொடர்பாக, பிரிட்டிஷ் ஒளிபரப்பு நிறுவனமான BBC ஓர் ஆவணப்படத்தை தயாரித்தது. இந்த ஆவண படமானதுதவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கூறி, மத்திய அரசு இந்த ஆவணப்படத்தை சமீபத்தில் தடை செய்தது.
அனில் ஆண்டனி கருத்து : இது குறித்து கேரள காங்கிரஸ் சமூக வலைதள பொறுப்பாளராக பதவியில் இருந்த அனில் ஆண்டனி தனது டிவிட்டர் பக்கத்தில், பிஜேபியுடன் பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிபிசியின் இந்த ஆவணப்படம் ஒரு ஆபத்தான முன் உதாரணம். இந்த ஆவணப்படம் நமது இறையாண்மையை குறைத்து மதிப்பிடும் வகையில் உள்ளது என குற்றம் சாட்டி இருந்தார். அதாவது மத்திய ஆளும் பாஜக நிலைப்பாட்டில் தனது கருத்தையும் பதிவிட்டு இருந்தார்.
காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு : இதற்கு காங்கிரஸ் கட்சி தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்ததால் கட்சியில் இருந்து விலகுவதாக அனில் ஆண்டனி அறிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதனை ராஜினாமா கடிதமாக கருதலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, காங்கிரஸில் டிஜிட்டல் கம்யூனிகேஷன்ஸ் பிரிவின் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நான் விலகுவது பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். என குறிப்பிட்டுள்ளார்.
அனில் ஆண்டனி ராஜினாமா : இதை எனது ராஜினாமா கடிதமாக கூட கருதுங்கள். என குறிப்பிட்டள்ளார். இங்கு நான் இருந்த குறுகிய காலத்தில், பல்வேறு சமயங்களில் முழு மனதுடன் எனக்கு ஆதரவளித்து வழிகாட்டிய கட்சித் தொண்டர்களுக்கும், கேரள மாநிலத் தலைமை மற்றும் டாக்டர் சசி தரூர் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன்.
எப்படி இருந்தாலும், நீங்களும், உங்கள் தாராளர்களும், தலைமையைச் சுற்றியுள்ள கூட்டமும் சந்தேகத்திற்கு இடமின்றி உங்களுக்கு ஆதரவாக இருக்கும் ஒரு சில நபர்களை மட்டுமே ஆதரிக்க ஆர்வமாக உள்ளீர்கள் என்பதை இப்போது நான் நன்கு அறிந்துவிட்டேன். இப்படிப்பட்ட பண்பே தகுதிக்கான ஒரே அளவுகோலாக மாறிவிட்டது. என அந்த கடிதத்தில் அனில் ஆண்டனி குறிப்பிட்டுள்ளார்.
அனில் ஆண்டனியின் தந்தை ஏ.கே.ஆண்டனி காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…