பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக அனில் ஆண்டனி நியமனம்.!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக தேசிய செயலாளர் அனில் ஆண்டனியை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நியமித்துள்ளார். இவருக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகனான அனில் ஆண்டனி, கடந்த ஏப்ரல் மாதம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
இந்நிலையில், தற்போது அனில் ஆண்டனி பாஜக தேசிய செய்தித் தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.