ரபேல் ஊழல் …!அனில் அம்பானிக்கு ரூ.284 கோடி லஞ்சம் …!பயத்தில் தூங்காமல் தவிக்கும் பிரதமர் மோடி …!ராகுல் காந்தி பரபரப்பு தகவல்
அனில் அம்பானி டசால்ட் நிறுவனம் லஞ்சமாக அளித்த ரூ.284 கோடி தொகையை வைத்து தான் அந்த நிலத்தை வாங்கியுள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, 58 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு, செப்டம்பர் 23-ஆம் தேதியில், ஒப்பந்தம் செய்யப்பட்டது. ரபேல் விமானங்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவகத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், பிரதமர் நரேந்திர மோடி ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் செய்ததற்கான தேவையான ஆதாரங்கள் உள்ளது. டசால்ட் ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில், நிலத்துக்காக அந்த தொகை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் அனில் அம்பானி டசால்ட் நிறுவனம் லஞ்சமாக அளித்த ரூ.284 கோடி தொகையை வைத்து தான் அந்த நிலத்தை வாங்கியுள்ளது தெளிவாக தெரிகின்றது. நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுனவத்துக்கு டசாலட் நிறுவனம் ரூ.284 கோடி தர வேண்டிய காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பினார்.அதேபோல் டசால்ட் நிறுவன அதிகாரி பொய் சொல்கின்றார்.
இந்த ஒப்பந்தமே அனில் அம்பானி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி என்ற இருநபர்களுக்கிடையேயானது ஆகும்.அதனால் தான் பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக தலையிட்டு இந்த ஒப்பந்தத்தை செய்தார்.எனவே இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெறுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் பிரதமர் நரேந்திர மோடி தவித்து வருகிறார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார் .