கொரோனவால் விடுமுறை ! ஆனாலும் வீடுகளுக்கு சென்று மதிய உணவு வழங்கும் ஊழியர்கள்

கேரளாவில் கொரோனாவால் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், சத்துணவை நம்பி இருக்கும் மாணவர்களுகளின் வீடுகளுக்கு சென்று மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது
சீனாவில் உள்ள உகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது.சீனாவை மட்டுமல்லாமல் 127 நாடுகளில் பரவி கொரோனா உலகை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வால் பலியானோரின் எண்ணிக்கை 1,016 ஆகவும் ,கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,113 ஆக உயர்ந்தது.இந்தியாவில் இதுவரை 70-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானாவர்களின் எண்ணிக்கை 16 ஆக உள்ளது.
வைரஸ் வேகமாக பரவிவருவதால் கேரளாவில் மார்ச் மாதம் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் 7ஆம் வகுப்பு வரை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் பள்ளிகள், டியூசன் மையங்கள், அங்கன்வாடி மையங்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கேரளாவில் கொரோனாவால் அங்கன்வாடிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில், சத்துணவை நம்பி இருக்கும் மாணவர்களுகளின் வீடுகளுக்கு சென்று மதிய உணவு வழங்க வேண்டும் என்று கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இதனால் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியில் உணவு சமைத்து அருகில் உள்ள மாணவர்களின் வீடுகளுக்கே சென்று உணவை வழங்கி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025