கிட்னியை விற்பதற்கு சப் கலெக்டரிடமே அனுமதி கோரிய இளைஞர்! கலங்கடித்த காரணம்!
ஆந்திரா மாநிலம் சித்தூரில் துணை ஆட்சியர் ( சப் கலெக்டர் ) கீர்த்தி ‘மக்கள் குறை தீர்ப்பு முகாம்’ நடத்தினார். அப்போது, அந்த கூட்டத்தில், சித்தூரை சேர்ந்த பாவா ஜான் என்பவர் துணை ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவை பார்த்த துணை ஆட்சியர் ஷாக் ஆகியுள்ளார். அதில், ‘ பாவா ஜான், தனது தங்கை திருமணத்தினை பெரிதாக நடத்தவேண்டும். அதற்க்கு தன்னிடம் போதுமான பணம் இல்லை. ஆதலால், எனது உடல் உறுப்புகளான கிட்னி போன்ற பாகங்களை விற்று பணம் பெற தாங்கள் அனுமதிக்க வேண்டும் என் அதில் பாவா ஜான் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்காக அவரை அழைத்த துணை ஆட்சியர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பிவைத்தார்.
பாவா ஜானுக்கு பெற்றோர் இல்லை. அவரும் அவர் தங்கையும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.