11 பேரின் உயிரை பலிகொண்ட தொழிற்சாலையை அகற்ற வேண்டும்.! பொதுமக்கள் போராட்டம்.!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வந்த எல்.ஜி பாலிமார்ஸ் தொழிற்சாலையில் இருந்து நேற்று முன்தினம் வெளியான விஷவாயுவால் அப்பகுதி மக்கள் மூச்சுத்திணறல் போன்ற உடல் பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
இந்த விஷவாயு தாக்கி 11 பேர் உயிரிழந்தனர். 1000-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த எல்.ஜி பாலிமர்ஸ் தொழிற்சாலையை அங்கிருந்து அகற்ற வேண்டும் எனவும், இந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.