பிரதமர் மோடியை சந்தித்தார் ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி- ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.அதன்படி வருகின்ற 30 ஆம் தேதி முதலமைச்சராக பதிவு ஏற்க உள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி.
இந்நிலையில் இன்று ஆந்திர முதல்வராக பதவியேற்க உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடியை சந்தித்துள்ளார்.மேலும் தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.