கொரோனா வார்டாக மாறிய ஆந்திர பல்கலைக்கழகம் கல்லூரி விடுதி

விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திர பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி விடுதி முழுவதும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு தங்கிருந்த 102 மாணவர்களும் ஊழியர்களும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தி நியூஸ் மினிட் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் முதன்மை தொடர்புகள் கண்டறியப்பட்டு, அவற்றின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வைரஸ் மேலும் பரவுவதைக் தடுக்க சோதனை செய்யப்படுகிறது.
இதுவரை ஆயிரம் மாணவர்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது என்றும் “வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சையளிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்” என்றும் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து நிலைமையை அறிந்து கொண்ட மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் எம்.எஸ். சீனிவாச ராவ் தெரிவித்தார்.
கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சுமார் 550 படுக்கைகளும், விசாகா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸில் (விம்ஸ்) 650 படுக்கைகளும் அவசர காலங்களில் உடனடியாக கிடைக்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025