Categories: இந்தியா

#BREAKING: ஆந்திரா ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!

Published by
murugan

கண்டகப்பள்ளி  ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் பலாசா பயணிகள் ரயில் மீது விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடா நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் மோதியது.  இந்த விபத்தில் விசாகப்பட்டினம் விரைவு ரயில் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. ரயில் மோதிக்கொண்ட விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. ரயில் விபத்தில் 10 பேர் உயிரிழந்ததாக விஜயநகர மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார். ரயில் பெட்டிகள் தடம் புரண்ட இடத்தில் ரயில்வே பணியாளர்கள், போலீசார் மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரயில் பெட்டிகள் தடம் புரண்ட விபத்தை எடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விபத்துக்குள்ளான இடம் இருள் சூழ்ந்த காணப்படுகிறது. ரயில் பெட்டிகள் தடம் புரண்டு கிடப்பதால் அவ்வழியாக செல்லும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இடத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் விரைந்து வந்துள்ளன. விசாகப்பட்டினம் அனகப்பள்ளி மாவட்டங்களில் இருந்து தேவையான அளவு ஆம்புலன்ஸ் வாகனங்களை அனுப்பவும், ரயில் விபத்துக்குள்ளான இடத்தில் மீட்டுப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், காயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும், அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனைத்து விதமான ஏற்பாடுகளை செய்யவும் முதல்வர் உத்தரவு ஜெகன்மோகன் அறிவுறுத்தியுள்ளார். கண்டகப்பள்ளியில் சிக்னல் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டிருந்த பலாசா பயணி ரயில் மீது விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த நான்கு மாதத்தில் ஆந்திராவில் தற்போது நிகழ்ந்த ரயில் விபத்தால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கடந்த ஜூன் மாதம் ஒடிசாவின் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

3 minutes ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

2 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

2 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

5 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

5 hours ago

மகளிர் ஒருநாள் போட்டி: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்!

குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…

7 hours ago