ஆந்திராவில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திராவில் விசாகப்பட்டினத்தில் உள்ள ரெல்லி சாலையில் வசித்து வருபவர் சுப்ரமணியம். அவர் தனது வீட்டின் அருகில் கோணிப்பை ஒன்று இருப்பதை பார்த்து, அதனுள் என்ன இருக்கிறது என்று கோணிப்பையை பிரித்து பார்த்த அவர் ஷாக்காகி உள்ளார். அந்த கோணிப்பையில் மனிதனின் தலை ஒன்று இருந்துள்ளது. அதனையடுத்து கோணிப்பையை யாராவது எடுக்க வருகிறார்களா என்று தனது வீட்டிலிருந்தப்படி கண்காணித்து வந்தார் சுப்ரமணியம்.
அப்போது அவரது வீட்டின் அருகிலுள்ள ஒரு பாழடைந்த வீட்டிலிருந்து ராஜு என்ற இளைஞர் அந்த கோணிப்பையை எடுத்து செல்வதை பார்த்துள்ளார். சிறிது நேரங்களுக்கு பிறகு சுப்ரமணியம் கோணிப்பையை எடுத்து சென்ற ராஜுவின் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்த போது, ராஜு மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணும் சேர்ந்து அந்த மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
உடனடியாக சுப்ரமணியம் போலீசாருக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ராஜு மற்றும் அவருடன் இருந்த இளம்பெண்ணை கைது செய்து கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ராஜுவின் தந்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்ததை அடுத்து, ராஜு சிறு சிறு சிறு திருட்டு வேலைகள் செய்து வருவதும், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் தெரிய வந்துள்ளது. அந்த மனிதனின் தலை மயானத்தில் இருந்து எடுத்து வரப்பட்டதா அல்லது யாரையாவது கொன்று கொண்டு வந்தார்களா..? என்கிற விதத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…