பெண்களுக்கு அடித்த ஜாக்பாட்! ஆந்திரா ஐடி-யில் இனி ‘ஒர்க் ஃபர்ம் ஹோம்’? முதலமைச்சர் திட்டம்!

ஆந்திராவில் பணிபுரியும் பெண்களுக்கு முழுக்க வீட்டில் இருந்து பணிபுரியும் வண்ணம் ஒர்க் ஃபர்ம் ஹோம் திட்டத்தை செயல்படுத்த ஆந்திர அரசு திட்டமிட்டு வருவதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.  

Andhra Pradesh CM N Chandrababu naidu

அமராவதி : நேற்று அறிவியல் துறையில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் சர்வதேச தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், ஆந்திர மாநில முதலமைச்சார் வாழ்த்து தெரிவித்து அம்மாநிலத்தில் பெண்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பு ஒன்று பற்றியும் கூறினார்.

அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் இதுபற்றி பதிவிடுகையில்,  ” ஆந்திரப் பிரதேசத்தில் பெண்களுக்காக, “வீட்டிலிருந்து வேலை செய்யும் Work From Home ” திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.” என்று பதிவிட்டார்.

மேலும் அவர் பதிவிடுகையில், ” முதலில், சர்வதேச பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் அறிவியல் தினத்தில் வாழ்த்துக்கள் என தெரிவித்த அவர், STEM-ல் (அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) உள்ள அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இன்று, நாங்கள் அவர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறோம். மேலும், இந்தத் துறைகளில் வளர்ச்சி வாய்ப்புகளை அவர்களுக்கு சமமான அளவில் அதிகரிக்கவும், அவர்களுக்கான முழு அணுகலை வழங்குவதற்கும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.

COVID-19 தொற்று காலகட்டத்தின்போது , பணி நிலவரம் மாறியது. தொழில்நுட்பம் எளிதில் கிடைக்கக்கூடியதாக இருந்ததால், “வொர்க் ஃப்ரம் ஹோம்” முக்கியத்துவம் பெற்றது. தொலைதூர வேலை, உடன் பணிபுரியும் இடங்கள் (CWS) மற்றும் அக்கம்பக்கப் பணியிடங்கள் (NWS) போன்ற கருத்துக்கள் நெகிழ்வான, உற்பத்தித் திறன் கொண்ட பணிச்சூழலை உருவாக்கின. இது அந்தந்த நிறுவனங்களையும், ஊழியர்களையும் ஒரே மாதிரியாக மேம்படுத்தியது.

இத்தகைய முயற்சிகள் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையையும் அடைய உதவும். ஆந்திராவில் அர்த்தமுள்ள இந்த மாற்றத்தை ஏற்படுத்த WFH போக்குகளைப் பயன்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். ஆந்திர பிரதேச IT & GCC கொள்கை 4.0 நடப்பு செயல்முறையை மாற்றும் ஒரு படியாகும். ஒவ்வொரு நகரம்/மண்டலத்தில் உள்ள IT அலுவலக இடங்களை உருவாக்க டெவலப்பர்களுக்கு நாங்கள் ஊக்கத்தொகைகளை வழங்குகிறோம் மற்றும் அடிமட்டத்தில் வேலைவாய்ப்பை உருவாக்க IT/GCC நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கிறோம்.

இந்த முன்முயற்சிகள் அதிக தொழிலாளர் பங்கேற்பை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன், குறிப்பாக பெண் தொழில் வல்லுநர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.” என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

rohit sharma and virat kohli
Rohit sharma - Virat kohli
Andhra Pradesh CM N Chandrababu naidu
senthil balaji edappadi palanisamy
Dragon Movie Budget
ADMK Chief secretary Edappadi Palanisamy - Madras High court