தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்! விரைவில் சிங்கப்பூர் பயணம்..,
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மகன் சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் நிலையில் அங்கு அவர் தீ விபத்தில் சிக்கியுள்ளார். இதனால், பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க் சங்கர் பவனோவிச் சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்று வருகிறார். இவரது மனைவி அன்னா லெஷ்னேவா சிங்கப்பூரில் முதுகலை படிப்பு பயின்று வருவதால் அவரது மகனும் அங்கு பயின்று வருகிறார்.
இந்நிலையில், சிங்கப்பூர் பள்ளியில் பயின்று வரும் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர், அங்கு பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியுள்ளார் என்றும், இதனால் கை, கால்களில் காயம் ஏற்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை வருகிறார்.
இதனை அடுத்து, பவன் கல்யாண் இன்று தனது திட்டமிட்ட பணிகளை முடித்துக்கொண்டு மகனை காண சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள உள்ளார். அவர் தற்போது அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் ஆய்வு பணிகள் மேற்கொண்டு வந்தார் என கூறப்படுகிறது.