ஆந்திர மாநில துணை முதல்வருக்கு கொரோனா தொற்று..!

Default Image

ஆந்திர மாநில துணை முதல்வர் அம்ஜத் பாஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா வைரசால் பொதுமக்கள் பாதிக்கப்படுவது மட்டுமின்றிகொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளர்கள், காவல்துறை பாதிக்கப்படுகின்றனர்.

மேலும்,  பதவியில் உள்ள எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உள்பட பல பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில துணை முதலமைச்சர் அம்ஜத் பாஷா, அவரது மனைவி, மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, இவர்கள் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்