இன்று ஆந்திர மாநில காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை இருப்பவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
குறிப்பாக தான் பதவி ஏற்ற நாள் முதலே அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறார்.சுகாதாரத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்தை ரூ.3000 -லிருந்து ரூ.10000-மாக உயர்த்தினார்.மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார்.வரலாற்றில் 5 துணை முதல்வர்கள் நியமனம் செய்து ஜெகன்மோகன் அதிரடி உத்தரவிட்டார்.அவர்களும் பதவி ஏற்றுள்ளனர்.மேலும் பல திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் ஆந்திர மாநில காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை இருப்பவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்பட வேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி இன்று முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக அம்மாநில டிஜிபி தெரிவித்துள்ளார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…