ஆந்திர முதல்வரின் கல்வி சீர்திருத்தங்கள்! 2.68 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம்!
ஆந்திராவில், 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொதுவாக அனைத்து மாநிலங்களிலும், அரசு வேலையில் உள்ளவர்கள் மற்றும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. இவர்கள் அதிகமாகி தனியார் பள்ளிகளின் தான் தங்களது குழந்தைகளை சேர்ப்பதுண்டு.
இந்நிலையில், ஆந்திராவில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் கல்வி சீர்திருத்தங்கள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்துள்ளது. இதன் காரணமாக 2.68 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மொத்தம் 42.46 லட்சம் மாணவர்கள் தங்களை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். எண்ணிக்கையானது, 2019-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை விட, 2.68 லட்சம் அதிகமாகும்.
இந்த வெற்றிக்கு காரணமா என்னவென்றால், 2019 முதல் செயல்படுத்தப்பட்ட மாணவர் பெற்றோர் சார்ந்த திட்டங்கள் ஏராளமாக இருப்பது தான் காரணம். முதல்வர் ஜெகன்மோகன் அவர்கள், முதல்வராக பதவியேற்பதற்கு முன், முந்தைய அரசாங்கத்தின் பெரிய உள்கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் அலட்சியம் ஆகியவை, ஆந்திர மாநிலத்தில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் அரசாங்கத்தால் நடத்தப்படும் அல்லது உதவி பெறும் பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்க தயக்கம் காட்ட காரணமாக அமைந்துள்ளது.