விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக சாலையில் மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் அந்த ரசாயன தொழிற்சாலை சுற்றியுள்ள கிராமத்து மக்களை மீட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அங்கு விஷ வாயுவால் பாதிக்கப்பட்டு, கிங்சார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவோரிடம் நலம் விசாரிக்கவும், ஆய்வு நடத்தவும் உள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. மேலும், தற்போது விஷவாயு கசிவால் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே இச்சம்பவம் குறித்து துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க சொல்லி மாநில பேரிடர் குழுவிடம் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். மேலும், பிரதமர் மோடி இச்சம்பவம் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…