நவம்பர் 2 முதல் பள்ளிகள் திறப்பு… அறிவித்தார் ஆந்திர முதல்வர்…
நவம்பர் 2 முதல் ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும் என்று ஆந்திர முதல்வர் அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலயில், கடந்த ஜூன் மாதம் முதல் தளர்வுகளை அறிவித்து வரும் மத்திய அரசு, கடந்த மாதம் முதல் பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மாநில அரசுகள் இறுதி முடிவு எடுத்துக்கொள்ளலாம் எனவும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. இந்நிலையில், ஆந்திரா மாநிலத்தில் வரும் நவம்பர் 2-ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
இதை, காணொலி வாயிலாக உரையாற்றிய ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ஒற்றைப்படை எண்களில் உள்ள வகுப்புகள் ஒரு நாளும், இரட்டைப்படை எண்கள் கொண்ட வகுப்புகள் ஒரு நாளும் நடைபெறும் என்றும் காலை நேரத்தில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனவும் வழிகாட்டுதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதத்திற்கு மட்டுமே இந்த முறையில் வகுப்புகள் நடைபெறும் எனவும் அதன்பிறகு சூழலை மதிப்பிட்டு டிசம்பரில் பள்ளிகள் செயல்படுவது தொடர்பாக அந்த நேரத்தில் புதிய அறிவிப்பு வெளியாகும் எனவும் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.