ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்திருப்பதால், இதற்கு அடிமையாகிய பலர் தங்களுடைய லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல இளைஞர்கள் வட்டிக்கு வாங்கிருந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவம் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 2 ஆண்டு சிறை பிடிக்கப்படுவர் என்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பலருக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்திருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதுபோல் பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். விரைவில் இதுபோன்ற அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…