ஆந்திராவில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை – ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி அறிவிப்பு.!

Default Image

ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஆன்லைன் சூதாட்டம் அதிகரித்திருப்பதால், இதற்கு அடிமையாகிய பலர் தங்களுடைய லட்சக்கணக்கான பணத்தை இழந்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பல இளைஞர்கள் வட்டிக்கு வாங்கிருந்த பணத்தை திரும்ப செலுத்த முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கின்ற சம்பவம் நடந்து வருகிறது. இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும் என்று பல மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார். ஆன்லைன் சூதாட்டம் நடத்தினால் 2 ஆண்டு சிறை பிடிக்கப்படுவர் என்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 6 மாதம் சிறை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பலருக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்திருந்தாலும், பொதுமக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இதுபோல் பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். விரைவில் இதுபோன்ற அறிவிப்பு வரும் என்றும் எதிர்பார்க்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்