ஆந்திரா மருத்துவமனையில் தீ விபத்து! கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்!

Default Image

ஆந்திரா மருத்துவமனையில் தீ விபத்தால் கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்.

ஆந்திரா மாநிலம், அனந்தபூர் நகரத்தில் உள்ள அரசு பொது  மருத்துவமனையில் சில கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு மருத்துவமனையின் ஒரு அறையில் தீடிரென தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்து  உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்த விபத்தில், கொரோனா நோயாளிகளின் அறைகளில் புகை பரவி மூச்சுத்திண்றலை ஏற்படுத்திய நிலையில், கொரோனா நோயாளிகள் அனைவரும் வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த சமயத்தை பயன்படுத்திக் கொண்ட 24 கொரோனா நோயாளிகள், அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்துள்ளனர். மேலும், அங்கிருந்தவர்களுக்கு இந்த தீ விபத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain
Kerala CMO bomb threat