இந்தியா

சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திரா ஐகோர்ட் உத்தரவு!

Published by
பாலா கலியமூர்த்தி

திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான என் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சி காலத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி கழக நிதியில் சுமார் 371 கோடி ரூபாய் வரையில் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

குற்ற வழக்கை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 16 மாதங்கள் கழித்து சந்திரபாபு நாயுடு மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 9ம் தேதி திறன் மேம்பாட்டு பயிற்சி கழக ஊழல் வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கை ஆந்திர மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிமுகவுக்கு சிக்கல்.. 2 முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை… ஆளுநர் அனுமதி

தெலுங்கு தேசம் கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அம்மாநிலம் முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்ந்து நீதிமன்ற காவல் விதித்து ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, முன்ஜாமீன் கோரி தொடர்ந்த மனுக்களை ஆந்திர உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை பாதிப்பு காரணமாக அவருக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.

53 நாட்களாக சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுக்கு கடந்த 31ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது, வரும் 24ம் தேதி ராஜமுந்திரி சிறை கண்காணிப்பாளர் முன் சந்திரபாபு நாயுடு சரணடைய வேண்டும் என நிபந்தனை விதித்திக்கப்பட்டது. நவ.24ல் சரணடைய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில், இந்த மனுவை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் உடல்நிலை பாதிப்புகள் குறித்த விவரங்களை ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் அவரது தரப்பு வழக்கறிஞர் சமர்ப்பித்து வாதாடிய நிலையில், ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

17 minutes ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

34 minutes ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

56 minutes ago

அஸ்வினை நிறுத்துங்க..திரிபாதியை தூக்குங்க! சென்னைக்கு கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் அட்வைஸ்!

சென்னை : என்னதான் ஆச்சு சென்னை அணிக்கு என்கிற வகையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி…

1 hour ago

இலங்கை அரசை வன்மையாக கண்டிக்கிறோம்! கச்சத்தீவு தீர்மானம் கொண்டு வந்து முதல்வர் பேச்சு!

சென்னை : நேற்று மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, சட்டப்பேரவை கூடிய நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

3 hours ago