இந்த சட்டத்தின் படி, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரங்களிலும் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் உருவாக்கப்படவுள்ளது.இந்த மசோதா குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறிப்பிடுகையில் ,டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பெயரில் சட்டம் இயற்றியுள்ளோம். ஆனால், நிர்பயா கொல்லப்பட்டு 7 வருடங்கள் ஆகிவிட்டன.ஆனாலும், இப்போது வரை அந்தக் குற்றவாளிகளை தூக்கிலிடவில்லை.
பாலியல் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை அளிப்பதே இந்த சமூகத்துக்கு நல்லது என குறிப்பிட்டார். சமீபத்தில் தெலுங்கானாவில் திஷா என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இதற்குக் காரணமான நாங்கு குற்றவாளிகளை போலீஸார் என்கவுன்டர் செய்தனர். திஷா கொலையாளிகளை என்கவுன்டர் செய்ததற்காக, சந்திரசேகர ராவ் அரசுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார் ஜெகன்மோகன் ரெட்டி. இந்த நிலையில், ஆந்திராவில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால், ஒரே வாரத்தில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் குற்றவாளியை தூக்கிலிடப்படும். இந்த அறிவிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…
சென்னை : தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானும் கசப்பை மறந்து மீண்டும் நட்பு பாராட்ட தொடங்கியுள்ளனர்.…
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில்…
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை…
சென்னை : இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer)…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்து குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்வு…