ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திர பாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளில் , ஓய்எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.151 தொகுதிகளில் வென்ற நிலையில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையின் கீழ் ஆந்திராவில் ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அந்த வகையில் ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை திருப்ப பெறுவதாக தற்போதைய முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.மேலும் அவரது குடும்பத்தினருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை திரும்ப பெறுவதாகவும் அறிவித்தார். அதற்கு பதிலாக 2+2 துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
இந்த நிலையில் தனக்கு அளிக்கப்பட பாதுகாப்பை திருப்ப பெறப்பட்டதை அடுத்து ஆந்திர உயர்நீதிமன்றத்தில் சந்திர பாபு நாயுடு வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சந்திர பாபு நாயுடுவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.ஆனால் பாதுகாப்பு பணிகளை வழங்க வேண்டியது யார் என்பதை கமேண்டோ படை மற்றும் மாநில பாதுகாப்பு படை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…