ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோதாவரி மாவட்டத்தில் “திஷா” காவல் நிலையத்தை தொடங்கி வைத்தார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்து என்கவுண்டர் செய்தனர்.பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 10-வது நாளில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்தது. பலரும் ஆதரவும் கொடுத்தனர். சிலர் எதிர்ப்பும் தெரிவித்தனர். என்கவுண்டர் செய்யப்பட்டதற்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு தெரிவித்தார். மேலும் தெலுங்கானா போலீசாரையும் பாராட்டினார்.
எனவே பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறையவும் , பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக ஆந்திரமாநில அரசு புதிய சட்டத்தை கொண்டுவர முடிவு செய்தது.இதை தொடர்ந்து ஆந்திர சட்டசபையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி , பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபடுவர்களை விசாரணை நடத்தி 21 நாட்களுக்குள் தூக்கு தண்டனை கொடுக்க ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் என்று தெரிவித்தார்.
பின் ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தனர். இதை தொடர்ந்து ஆந்திர சட்டசபையில் ஆந்திர பிரதேச திஷா சட்டம் என பெயர் வைக்கப்பட்ட இந்த புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.இந்த சட்டம் பாலியல் வழக்குகளை 14 நாட்களுக்குள் விசாரித்து 21 நாட்களுக்குள் தண்டனை கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கோதாவரி மாவட்டத்தில் “திஷா” காவல் நிலையத்தை தொடங்கி வைத்தார். இது குறித்து அவர் பேசுகையில்,வரலாற்று சிறப்புமிக்க சட்டங்களில் ஒன்று திஷா’ சட்டம் .இந்த சட்டமானது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைவாக தண்டனை கிடைப்பதை உறுதி செய்கிறது என்று தெரிவித்தார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…