லஞ்சம் கேட்டால் உடனே 14400 என்ற நம்பரை தொடர்பு கொள்ளுங்கள்! அதிரடி முதல்வரின் அடுத்த திட்டம்!

Default Image

ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு அதிரடி நலத்திட்டங்களை மக்களுக்கு அறிவித்து வருகிறார்.
மதுபான கடைகள் குறைப்பு, மதுபான பார் லைசென்ஸ் கட்டணம் கடுமையாக உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி கல்வி என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அடுத்த அதிரடியாக ஆந்திர மாநிலத்தை லஞ்சம் இல்லாத மாநிலமாக உருவாக்க தற்போது புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார். அதில் அரசு ஊழியர்கள் யாராவது லஞ்சம் கேட்டால், உடனே 14400 என்ற எண்ணிற்கு போன் செய்து அந்த அதிகாரி பற்றி கூறலாம்.
இதற்கென ஊழல் தடுப்பு பணியகம் முதல்வர் அலுவலகத்திலேயே ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஜெனரலாக குமார் விஸ்வஜித் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். புகார் செய்த 15 நாட்களுக்குள் அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்தடுத்து அதிரடி திட்டங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் அவரது நடவடிக்கைகள் பொதுமக்களால் கவனிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்