பாஜக தலைவர் அமித் ஷா ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பாஜக கட்சி பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் இதுதொடர்பாக ஆலோசனை நடத்த இரு மாநில பாஜக தலைவர்கள், பொதுச் செயலாளர்களை டெல்லி வரும்படி அழைப்பு விடுத்துள்ளார் அமித்ஷா .
அடுத்த ஆண்டு ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடைபெற உள்ளன. இதில் இரு மாநிலங்களிலும் யாருடன் கூட்டணி வைப்பது, மாநில கட்சிகளின் நிலைப்பாடு போன்றவற்றை அறிந்து கொள்ள பாஜக தேசிய தலைவர் அமித் ஷா அழைப்பின்படி ஆந்திர பாஜக நிர்வாகிகள் ஹரிபாபு, விஷ்ணு குமார் ராஜூவும், தெலங்கானாவிலிருந்து கிஷன் ரெட்டி, லட்சுமண் ஆகியோரும் நேற்றிரவு விமானம் மூலம் டெல்லி சென்றனர். இன்று காலை அமித் ஷா வீட்டில் இவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதில் ஆந்திராவில் தெலுங்கு தேசத்துடன் கூட்டணியை தொடர்வது குறித்தும் தெலங்கானாவில் தனித்து போட்டியிடுவதா அல்லது டிஆர்எஸ் கட்சியுடன் கூட்டணியா என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.