புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஆந்திரத் தலைநகர் அமராவதியின் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், சட்டப்பேரவை போன்ற பகுதிகளில் மாசு ஏற்படுவதைத் தவிர்க்க இந்த சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இந்த சைக்கிள்கள் மூலம் இப்பகுதிகளில் யார் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு உபயோகிக்கலாம். இதற்கென தனிக் கட்டணம் கிடையாது. இதற்காக தனியாக ஒரு ஏடிஎம் கார்டு போன்ற ஒரு ஸ்மார்ட் கார்டு, செக்யூரிட்டி அறையில் வழங்கப்படும்.
மேலும், இதற்கென தனி பாஸ்வேர்டு கொடுக்கப்படும். அந்த பாஸ்வேர்டு மூலமாக மட்டுமே இந்த சைக்கிள்களின் பூட்டு திறக்கும். இந்த சைக்கிள் நிறுத்த 3 இடங்களில் ‘பார்க்கிங்’ ஏற்பாடும், தனி சைக்கிள் பாதையும் அமைக்கப்படுகிறது.
இந்த சைக்கிள்களை உபயோகித்த பின்னர், அதனைக் குறிப்பிட்ட ‘பார்க்கிங்’ பகுதியில் விட்டுச் செல்லலாம்.
இந்த சைக்கிள்கள் மழையில் நனைந்தாலும் துருப்பிடிக்காது. மேலும், இதில் 3 ‘கியர்’கள் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.