குட் நியூஸ்.! மேலும் 3 மாத பி.எஃப் மத்திய அரசே செலுத்தும்- நிதியமைச்சர்.!
ஜூன், ஜூலை,ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கும் பி.எஃப் சந்தாவை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே 5 வது முறையாக உரையாற்றினார். அப்போது ரூ.20 லட்சம் கோடிக்கு சிறப்பு திட்டத்தை அறிவித்திருந்தார். இந்த திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரூ.20 லட்சம் கோடி சிறப்பு திட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார்.
அதில், ஜூன், ஜூலை,ஆகஸ்ட் ஆகிய மேலும் 3 மாதங்களுக்கும் பி.எஃப் சந்தாவை மத்திய அரசே செலுத்தும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதற்கு முன் மார்ச், ஏப்ரல் ,மே ஆகிய மூன்று மாதங்களுக்கு பி.எஃப் சந்தாவை அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.