தலையைதுண்டித்து 3 பேர் படுகொலை! கோவிலை சுற்றி தெறிக்கப்பட்டுள்ள ரத்தம்! பின்னணி என்ன?!

Default Image

ஆந்திர மாநிலம் ஆனந்தபுரத்தில் உள்ள கொத்திகோட்டா எனும் கிராமத்தில் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவிலில் பூஜை செய்து வந்த சிவராமன், அவரது சகோதரி கமலம்மா, மற்றும் உறவினர் லட்சமியம்மாள் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தையே அதிர வைத்துள்ளது.

ஓய்வு பெற்ற ஆசிரியர் சிவராமன் தனது அக்காள் கமலாம்மாவுடன் ஆனந்தபுரத்தில் உள்ள கொத்திக்கட்டா கிராமத்தில் தங்களுக்கு சொந்தமாக உள்ள சிவன் கோவிலில் தினமும் பூஜை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இவர்களை காண பெங்களூருவை சேர்ந்த லட்சுமியம்மாள் எனும் உறவினர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்னர் வந்துள்ளார். இவர் வருகையில் பஞ்சலிங்கம் ஒன்றையும் பூஜைக்காக கொண்டு வந்து இவர்களுடன் தினமும் பூஜை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென இவர்கள் மூவரும் தலை துண்டிக்கப்பட்டு கோவில் வளாகத்திலேயே படுகொலை செய்பட்ட சம்பவம் ஊர்மக்கள் மூலமாக ஆந்திர போலீசிற்கு தெரிய வர, உள்ளே சென்று பார்த்த போலீசாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

அவர்களை தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதும், அவர்களின் ரத்தம் கோவில் வளாகம், அங்குள்ள சிவலிங்கம், கோயில் புற்று என அனைத்திலும் இருந்தது தெரியவந்துள்ளது. இதனை கண்ட போலீசார், இந்த படுகொலை, புதையலுக்காக நரபலி கொடுக்கப்பட்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டு, நரபலி போல சித்தரித்து திசை திருப்பி உள்ளார்களா என பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலையில் எதுவும் துப்பு கிடைக்காததால் போலீசார் விசாரணையில் திணறி வருகின்றனர். இந்த கொலையை விசாரணை நடத்த மூன்று தனிப்படை அமைக்கபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Tamilnadu Live
Pooran
TATAIPL - DCvLSG
KL Rahul
Vijay - Ashwath Marimuthu
DC vs LSG
janaNayagan - Vijay