‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!
தனது 30வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆனந்த் அம்பானி ஜாம்நகரிலிருந்து துவாரகாவிற்கு 140 கிலோமீட்டர் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளார்.

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140 கி.மீ. தூரம் பாதயாத்திரையாகச் சென்று துவாரகா கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். இவரது பிறந்தநாள் ஏப்ரல் 10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் துவாரகா கோயிலை சென்றடைந்து, தனது பிறந்தநாளின் போது துவாரகாதீஷை தரிசிப்பார்.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க அனந்த் இரவில் நடந்து செல்வதாக கூறப்படுகிறது. இதற்காக, ஜாம் நகரிலிருந்து துவாரகாவுக்கு 5 நாள் நடைப்பயணமாகச் செல்ல ஆனந்த் அம்பானி திட்டமிட்ட அவர் ஒவ்வொரு இரவும் 10-12 கி.மீ. தூரம் நடந்து செல்ல உள்ளார்.
இந்த நிலையில், யாத்திரையின் போது செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் அம்பானி , ‘கடந்த 5 நாட்களாக யாத்திரையை தொடர்ந்து வருகிறேன், இன்னும் 2 முதல் 4 நாட்களில் நிறைவடையும். துவாரகாதீசர் மீது இளைஞர்கள் நம்பிக்கை வைக்கவேண்டும், கடவுள் இருந்தால் போதும், நாம் எதற்குமே கவலை கொள்ள வேண்டாம்” என கூறியிருந்தார்.
மேலும் அந்த நடைபயணத்தின் போது, கம்பாலியா பகுதியில், ஒரு வேனில் இறைச்சிக் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட இருந்தகோழிகளை ஏற்றுச் சென்றுள்ளனர். இதை பார்த்த ஆனந்த், உடனே வேனை நிறுத்தி அந்த கோழிகளை விடுவித்தால், 2 மடங்கு பணம் தருவதாக கூறினார். இதையடுத்து சுமார் 250 கோழிகள் விடுவிக்கப்பட்டது.
பின்னர் இது அவரது விலங்குகள் சரணாலயமான வந்தாராவிற்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. அனந்த் அம்பானியின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும், விலங்குகள் மீதான ஆனந்தின் அன்பை பாராட்டி வருகின்றனர்.
250 chickens. Packed in a vehicle. Likely to be slaughtered. But then, Anant Ambani steps in.
~ He spots the truck. Stops it. Talks to the owner. Pays the price. BUYS all chickens. Sends them for care in VANTARA 👏🏼He is on his way to Dwarka for his 30th birthday❤️ pic.twitter.com/QynpGnFQsX
— The Analyzer (News Updates🗞️) (@Indian_Analyzer) April 1, 2025