உணவு விருந்துக்கு மட்டும் ரூ.200 கோடி செலவு! ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தின் பிரம்மாண்டம்

Anant Ambani: ஆனந்த் அம்பானி – ராதிகா ஜோடியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளின் போது உணவுகளுக்கு மட்டும் செலவிடப்பட்ட தொகை குறித்து வாய்பிளக்கும் ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் மார்ச் 1-ஆம் தேதியில் இருந்து மார்ச் 3-ஆம் தேதி வரை திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள், பெரும்புள்ளிகள் மட்டுமின்றி, உலக அளவிலான பிரபலங்களும் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Read More – வன்கொடுமை செய்யப்பட்ட ஸ்பானிஷ் பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு.!

ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கான கொண்டாட்டங்களுக்கு ரூ. 1260 கோடி வரை செலவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் உணவுகளுக்கான கேட்டரிங் ஒப்பந்தத்திற்கு மட்டும் ரூ. 200 கோடி செலவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation