மகனின் தேர்வுக்காக 106 கி.மீ சைக்கிளில் சென்ற தந்தையை பாராட்டி, உதவிக்கரம் நீட்டிய ஆனந்த் மஹிந்திரா!

Default Image

மகனின் தேர்வுக்காக 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே சென்று மகனுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்திய தந்தைக்கு ஆனந்த் மஹிந்திரா உதவிக்கரம் நீட்டி உள்ளார்.

மத்திய பிரதேசத்தின் தார் எனும் மாவட்டத்தில் உள்ள மானவர் தேசில் எனும் குக்கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியாகிய தந்தை ஒருவர், கொரோனா ஒன்றாடங்கால் போக்குவரத்துக்கு வசதிகள் இல்லாத சூழ்நிலை காணப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தனது மகனை 106 கிலோ மீட்டர் சைக்கிளிலேயே அழுத்தி சென்று தேர்வு எழுத வைத்துள்ளார்.

இதற்காக 500 ரூபாய் கடன் வாங்கிக் கொண்டுதான் பிரார்த்தனையுடன் பயணத்தை தொடங்கினேன் எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த ஏழைத் தந்தையின் செயலுக்கு பலர் பாராட்டுகளை கொடுத்திருந்தாலும்,தொழிலதிபர். ஆனந்த் மஹிந்திரா அவர்கள் வீர தீரமான பெற்றோர்கள்,  தன் குழந்தைகளுக்காக பெரிய கனவு காண்பவர்கள். இதுதான் ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு எரிபொருளாக இருக்கும் எனக் கூறி அவருடைய அறக்கட்டளை சார்பில் அந்ததந்தையின் மகனது அடுத்தகட்ட கல்விக்கு உதவுவதாக அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்