ஆனந்த் அம்பானி : உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு முந்தைய திருமண விழா, ஒரு சொகுசு கப்பலில் நாளை முதல் தொடங்குகிறது.
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் இந்த வாரம் ஐரோப்பாவில் தங்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்ட நிகழ்வை நான்கு நாள் கொண்டாட திட்டமிட்டுள்னர். ஒரு பிரம்மாண்ட கப்பலில் இத்தாலியில் தொடக்கி பிரான்ஸ் வரை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழ் கொண்டாட்டத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்-க்கும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், கடந்த மார்ச் 1 – 3ம் தேதி குஜராத்தின் ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதை தொடர்ந்து, நாளை முதல் (29ம் தேதி) ஜூன் 1 வரை இரண்டாம் ப்ரீ வெட்டிங் நிகழ்வு நடைபெறுகிறது.
விருந்தினர்கள் அனைவரும் கலந்த கொள்ளவிருக்கும் சொகுசு கப்பலில் 4,380 கி.மீ., (இத்தாலி – பிரான்ஸ்) பயணப் பார்ட்டியாக திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நான்கு நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வு நடைபெறும்.
இது ஒரு எதிர்காலத்துக்கான பயணம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பயணத்தில் சல்மான், தோனி போன்ற 800 பிரபல விருந்தினர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு தேவையான அணைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு 600 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.
இத்தாலியின் பலேர்மோவில் உள்ள பயணக் கப்பலில் விருந்தினர்களை வரவேற்கும் வகையில், மதிய உணவுடன் நாளை (முதல் நாள்) தொடங்குகின்றது. விருந்தினர்களுக்கான ஆடைக் குறியீடு “கிளாசிக் க்ரூஸ்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை மாலை, “நட்சத்திர இரவு” (Starry Night) என்ற தலைப்பின் கீழ், ஒரு நிகழ்வு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் விருந்தினர்கள் மேற்கத்திய ஆடைகளை அணியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…