மஹாராஷ்டிராவில் கொடூரம்.! துப்பாக்கி முனையில் உ.பி பெண்ணிற்கு நேர்ந்த துயரம்.!
உத்திர பிரதேச பெண் ஒருவர் புனேக்கு மருத்துவ சிகிச்சைக்கு வந்த போது ஒரு நபர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தைச் சேர்ந்த 36 வயது பெண் மஹாராஷ்டிரா மாநிலம் புனேவுக்கு வந்துள்ளார் . அங்கு இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளார்.
இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக கொஞ்ச நாள் தங்க வேண்டி இருந்தததால் அருகில் வீடு பார்க்க சென்றுள்ளார். அப்போது வாடகை வீட்டை காண்பிப்பதாக கூறி சஞ்சய் பாஜிராவ் போசலே என்பவர் அந்த பெண்ணை ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு, துப்பாக்கி முனையில் 36 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த புகாரை அடுத்து 52 வயது ரியல் எஸ்டேட் முகவர் சஞ்சய் பாஜிராவ் போசலே கைது செய்யப்பட்டுள்ளார்.