அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மாநில அரசு விரைவில் கவிழும்..! – ஆதித்யா தாக்கரே
முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியலமைப்புக்கு எதிரான மாநில அரசு மிக விரைவில் கவிழும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற பேரணியில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் அரசியலமைப்புக்கு எதிரான மாநில அரசு மிக விரைவில் கவிழும் என்று சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தாக்கரே கூறினார். சிவசேனா கட்சியின் ‘சிவ் சம்வாத் யாத்ரா’வின் ஒரு பகுதியாக ஜல்னாவில் பேரணி நடத்தப்பட்டது.
இந்த பேரணியில் பேசிய சிவசேனா தலைவரும், முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவின் மகனான ஆதித்யா தாக்கரே, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியலமைப்புக்கு எதிரான மாநில அரசு மிக விரைவில் கவிழும் என்று கூறியுள்ளார்.
இந்த அரசு எப்படி நடத்தப்படுகிறது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என்றும் கவர்னர் பகத் சிங் கோஷ்யாரி பொது சின்னங்களையும் மகாராஷ்டிராவையும் அவமதித்தார். ஆனால் ஷிண்டே ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்று அவர் மேலும் கூறினார். இந்த அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான அரசாங்கம் அதிக நாட்கள் நீடிக்காது. மிக விரைவில் விழும் என்று ஆதித்யா கூறினார்.