கெஜ்ரிவால் வெளியில் வரக்கூடாது என ஒரு கூட்டமே வேலை செய்கிறது.! மனைவி குற்றசாட்டு.!
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அந்த புகாரின் பெயரில் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டஅரவிந்த் கெஜ்ரிவிலுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜூன் 20ஆம் தேதி ஜாமின் வழங்கியது. அதன் பின்னர் அமலாக்கத்துறை உடனைடியாக உயர்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் மீது இடைக்கால தடை வாங்கியது. பின்னர், நேற்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் தடை செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து , இன்று அதே மதுபான கொள்கை முறைகேடு வழக்கை விசாரணை செய்து வரும் சிபிஐ , அமலாக்கத்துறையை கைது செய்துள்ளது. மேலும், டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலிடம் 5 நாள் விசாரணைக்கு அனுமதி கோரியுள்ளது.’
இந்த நடவடிக்கைகள் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், எனது கணவர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியில் வரக்கூடாது என ஒரு அமைப்பே வேலை செய்து வருகிறது. இப்படியான செயல் தான் சர்வாதிகாரம் அல்லது அவசரநிலை என கூறப்படுகிறது என குற்றம் சாட்டி உள்ளார்.
முன்னதாக கெஜ்ரிவால் கைது குறித்து ஆம் ஆத்மி கட்சி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்து விடும் என்று தெரிந்து தான் பாஜக பீதியடைந்து சிபிஐயால் அவரை கைது செய்ய வைத்துள்ளது என குற்றம் சாட்டினர்.