மகாராஷ்டிரா : மல்காபூரில் உள்ள குத்ரா புத்ருக் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக வந்த கார் மோதிய அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், மெரூன் நிற கார் ஒன்று அதன் பாதையில் இருந்து சற்று விலகி சாலையோரம் நடந்து செல்லும் முதியவர் மீது மோதியதை காட்டுகிறது. சீராக வந்து கொண்டிருந்த கார் திடீரென மோதியது பார்ப்பதற்கு சோகத்தையும் வேதனையும் ஏற்படுத்துகிறது.
அது வீடியோவில் காணப்படுவது போல், கார் முதியவர் மீது மோதவும், காற்றில் தூக்கி வீசப்பட்டார். மேலும், முதியவர் மீது கார் மோதியவுடன், நின்ற கார் அவரை கண்டுகொள்ளாமல் திரும்பி வேகமாக சென்றதையும் வீடியோ காட்டுகிறது.
ஒரு தகவலின்படி, நாம்தேவ் துக்காராம் காவ்டே என்ற அடையாளம் காணப்பட்ட அவர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதியவரை கார் மோதிய சம்பவத்தை போலீசார் விசாரணை நடத்தி, இரு கோணங்களில் விசாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…