11 முறை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்..!
பீகாரில் 11 முறை கொரோனா கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர்.
பீகார் மாநிலம், மாதேபுரா மாவட்டத்தின் ஓரய் எனும் கிராமத்தை சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 முதியவர் ஓய்வுபெற்ற தபால் துறை ஊழியர் ஆவார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 13 அன்று முதல் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளார். அதனை தொடர்ந்து, டிசம்பர் 30-ஆம் தேதி வரை 11 முறை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். 12-ஆம் தவணை தடுப்பூசி செலுத்த வந்த போது அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தடுப்பூசி செலுத்தி கொள்வது தனக்கு நல்ல பலனைத் தருவதாகவும், அதனால், தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்வதாகவும், ஒவ்வொரு முறையும் தடுப்பூசி செலுத்திக் கொண்ட தேதியை குறித்து வைத்திருப்பதாகவும், அரசு அற்புதமான தடுப்பூசி உற்பத்தி செய்து இருக்கிறது, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவர் எட்டு முறை தனது ஆதார் கார்டு, மொபைல் எண்ணை சமர்ப்பித்து தடுப்பு செலுத்தி கொண்டதாகும், மனைவியின் வாக்காளர் அடையாள அட்டை, அவருடைய மொபைல் எண்ணை குறிப்பிட்டு மூன்று முறை பல்வேறு இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
மேலும், முதியவரின் இந்த செயல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.