வெவ்வேறு டோஸ் தடுப்பூசிகள் மாற்றி செலுத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் !

Default Image

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகர் கிராமத்தில் தடுப்பூசிகளில் முதல் டோஸ் இரண்டாம் டோஸ் வெவ்வேறாக மாற்றி செலுத்தப்பட்டது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தனது தீவிரத்தை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், மக்கள் முக கவசம் அணிவதையும் சமூக இடைவெளியை பின்பற்றுவதும் வழக்கப்படுத்திக் கொண்டாலும் அதற்கான தடுப்பூசியும் செலுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். எனவே மக்கள் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்தார்த் நகர் கிராம அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு முதல் டோஸ் கோவிஷீல்டும் இரண்டாவது ரோஸ் கோவாக்சின் என மாற்றி மாற்றி செலுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் தடுப்பூசி செலுத்தப்பட்ட 20 பேருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி மாற்றி செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இது உண்மையாக நடந்து இருந்தால் அது கவலைக்குரிய விஷயம் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்