இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் மீதான பாலியல் குற்றசாட்டுகளை விசாரிக்க மல்யுத்த வீராங்கனை மேரிகோம் தலைமையிலான விசாரணை குழுவை அமைத்தது மத்திய அரசு.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றசாட்டுகளை முன்வைத்து, அதுகுறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என மல்யுத்த வீரர் வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பின்னர் இந்த மத்திய அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதனை தொடர்ந்து பிரபல மல்யுத்த வீராங்கனை மேரிகோம் தலைமையில் விசாரணை குழுவை அமைத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விசாரிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த குழுவில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பேட்மிண்டன் வீராங்கனை திருப்தி முர்குண்டே, முன்னாள் டாப்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ராஜகோபாலன் மற்றும் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் இந்த மல்யுத்த சம்மேளத்தின் ஒருமாத கால நடவடிக்கையை கண்காணிப்பார்கள். அதே போல, தற்போது கூறப்பட்டுள்ள பாலியல் குற்றசாட்டுகள், மற்ற பிற குற்றசாட்டுகளையும் இந்த குழு விசாரிக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…