திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற கைதி..! திகார் சிறையில் தற்கொலை..!
திருட்டு வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டெல்லி மாளவியா நகரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தில் கைதான 26 வயது நபர் ஒருவர் திகார் சிறை வளாகத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட நபர் ஜாவேத் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதியால் தண்டனை விதிக்கப்பட்டது. நேற்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாவேத் கைதிகளை சிறையில் அடைக்கும் நேரத்தில் பொது கழிப்பறை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பானிவால் கூறுகையில், கைதிகளை சிறையில் அடைக்கும் நேரத்தில் பொது கழிப்பறை பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார், பின்னர் சிறை ஊழியர்கள் அவரை சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்ததாகவும் கூறினார்.
மேலும், இந்த தற்கொலை சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிறைத்துறை இயக்குநர் ஜெனரல் சஞ்சய் பானிவால் தெரிவித்துள்ளார்.