தெலுங்கானாவை சார்ந்த 24 வயதான வருண் ராஜ் புச்சா என்பவர் அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தில் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் மாணவராக இருந்துள்ளார். கடந்த அக்டோபர் 29 அன்று உடற்பயிற்சி கூடத்தில் ஜோர்டான் ஆண்ட்ரேட் என்பவர் கத்தியால் வருண் ராஜ் புச்சா குத்தினார்.
இதைதொடர்ந்து, ஃபோர்ட் வெய்னின் லூத்தரன் மருத்துவமனையில் வருண் ராஜ் புச்சா சிகிக்சை பெற்று வந்தார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்று அவரது உறவினர் கூறியதாக கூறப்ப்படுகிறது. இந்நிலையில், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வருண் ராஜ் புச்சா இன்று உயிரிழந்தார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். புச்சாவின் உறவினர்கள் சிலர் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.
அதே சமயம் அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஜோர்டான் ஆண்ட்ராட் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் வருண் ராஜ் உடன் நேரடியாக பேசியது கிடையாது. ஆனால் அவரால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதை அறிந்தேன். அதனால் தான் கத்தியால் குத்தினேன் என கூறியுள்ளார். அமெரிக்காவில் வருண் கணினி அறிவியலில் முதுகலைப் படித்துக் கொண்டிருந்தார். இந்தியாவில் இருந்து கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவிற்குப் புறப்பட்டார். அடுத்த ஆண்டு தனது படிப்பை முடித்த பிறகு தெலுங்கானாவின் கம்மத்திற்கு அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வட அமெரிக்க தெலுங்கு சங்கம் வருணின் குடும்பத்திற்காக ரூ.90,000 நீதி திரட்டியது. வருணின் தந்தை தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். அவரது உடலை இந்தியா கொண்டு வந்து தகனம் செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…
தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…
விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…
புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…