இந்திய சுதந்திர வரலாற்றில் முக்கிய நிகழ்வு… மரியாதை செலுத்திய பிரதமர் மோடி.!

Default Image

பிரதமர் நரேந்திர மோடி தண்டி யாத்திரையின் நினைவு தினத்தில் அதில் பங்கு பெற்றவர்களுக்கும் மகாத்மா காந்திக்கும், மரியாதை செலுத்தினார்.

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் “தண்டி யாத்திரை” மிகவும் முக்கியமான மறக்க முடியாத நிகழ்வாகும். 1930-ஆம் ஆண்டு ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு பகுதியாக, மகாத்மா காந்தி தலைமையிலான சுதந்திர போராட்டவீரர்கள் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திலிருந்து கடலோர கிராமமான தண்டிக்கு அணிவகுத்துச் சென்று, உப்புச் சட்டத்தை மீறி கடல்நீரில் உப்பு தயாரித்தனர்.

எனவே, இதன்மூலம், உப்பு எடுக்க ஆங்கிலேயர்களால் போடப்பட்டிருந்த சட்டத்தினை சுதந்திர போராட்டவீரர்கள் மீறினர். இந்த நிலையில், இந்த வரலாற்று சிறப்புமிக்க 93-வது தண்டி யாத்திரை தினத்தில் மகாத்மா காந்திக்கும், அதில் பங்கேற்றவர்களுக்கும் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் கூறிருப்பதாவது ”  மகாத்மா காந்தி மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். இது நமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாகும். பல்வேறு வகையான அநீதிகளுக்கு எதிரான உறுதியான முயற்சியாக இது நினைவுகூரப்படும்” என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்