1000 சான்றிதழ்கள்.. போலி முதுகலை.. பி.எச்டி பட்டங்கள்… பெங்களூருவில் சிக்கிய மோசடி கும்பல்.!
பெங்களூருவில் ஒரு தொலைதூர கல்வி நிலையத்தில் போலியாக முதுகலை, பிஎச்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
போலி சான்றிதழ் , போலி பட்டம் என்று உலா வந்து, தற்போது புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களில் முதுகலை பட்டம், பி. எச்டி பட்டம் வரையில் வந்துவிட்டது. அதுவும் தொலைதூர கல்வி வழங்கும் ஒரு கல்வி நிலையத்தில் தான் இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன.
அங்கு அண்மையில் அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1000 போலி சான்றிதழ்கள், முத்திரைகள் ஆகியவை கண்டறியப்பட்டன. இந்த போலி சான்றிதழானது இந்தியாவில் பிரபல கல்வி நிறுவனங்களில் பெயர்களில் வழங்கப்பட்டுள்ளன.
அதன்மூலம், முதுகலை பட்டம், பிஎச்டி போலி பட்டங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளன. இந்த சோதனையில் இதுவரையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.