விறுவிறு 5ஜி சேவை… வாரத்திற்கு 2500 பேஸ் ஸ்டேஷன்.! மத்திய அமைச்சர் தகவல்.!
5ஜி சேவைக்காக வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன. – மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான்.
நாட்டில் 5ஜி சேவை வழங்குவதற்கான நடவடிக்கை முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. அதற்கான முக்கிய தொடர்பு புள்ளியாக இருக்கும் பேஸ் ஸ்டேஷன்களை அமைக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெறுகிறது.
இது குறித்து மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான் கூறுகையில் வாரத்திற்கு சராசரியாக 2500 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டு வருகின்றன.
இதில் நவம்பர் மாதம் 26 நிலவரப்படி, 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20,980 பேஸ் ஸ்டேஷன்கள் நிறுவப்பட்டுள்ளன. என்றும் இதில் ஜியோ நிறுவனம் 17,687 பேஸ் ஸ்டேஷன்களையும் , ஏர்டெல் நிறுவனம் 3,293 பேஸ் ஸ்டேஷன்களையும் நிறுவியுள்ளது என அமைச்சர் தேவுசின் சவுகான் கூறியுள்ளார்.