டெல்லி வீதியில் தாறுமாறாய் கார் ஒட்டிய காவல் அதிகாரி.! போதையில் விபத்து நடந்ததா.?
டெல்லியில் துவாரகா பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த உதவி சப்-இன்ஸ்பெக்டரின் கார் பல வாகனங்களை இடித்து சேதப்படுத்தியுள்ளது.
டெல்லியில் துவாரகா பகுதியில் ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த மற்ற வாகனங்கள் மீது மோதியுள்ளது. மேலும், காவல் கட்டுப்பாடு வாகனத்தையும் அந்த கார் இடித்து சேதப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்தியது டெல்லி காவல் துறை உதவி சப்-இன்ஸ்பெக்டர் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அது ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் குடிபோதையில் நடந்ததா என்பது ஆய்வு முடிவுகள் வெளியான பிறகு தான் தெரியவரும். அதன் பிறகு விசாரணை தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.