ரூ.23 லட்சம் மோசடி! ராபின் உத்தப்பாவுக்கு கைது வாரண்ட்!

தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்காக உரிய PF தொகையை செலுத்தவில்லை என்று ராபின் உத்தப்பா மீது கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது பெங்களூரு போலீஸ்.

Robin uththappa

பெங்களூரு : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா பெங்களூருவில் Centaurus Lifestyle Brands Private Ltd எனும் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு முறையாக PF பணம் செலுத்தவில்லை என புகார் எழுந்துள்ளது.

அதாவது, ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அந்த நிறுவனம் முறையாக PF பணத்தை EPFOவிடம் வைப்பு நிதியாக செலுத்த வேண்டும். ஆனால், இந்த தொகையில் சுமார் ரூ.23 லட்சம் வரையில் அவர் நிறுவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக , உத்தப்பாவுக்கு நோட்டீஸ் வழங்க பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் அவர் அங்கு இல்லை எனக்கூறப்படுகிறது. இதனை அடுத்து, குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்தின் நிறுவனர் உத்தப்பா மீது கைது வாரண்ட் பிறப்பித்து அவரை கைது செய்யுமாறு EPFO ஆணையர்  ஷடாக்ஷிரி கோபாலா ரெட்டி புலகேசி நகர் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன .

ரூ.23 லட்சம் PF தொகையை வருங்கால வைப்பு நிதியாக செலுத்தவில்லை என்றும், இது தொடர்பாக முறையாக விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பியும் நிறுவனம் தொடர்பாக எந்த பதிலும் இல்லை என்பதாலும், Centaurus Lifestyle Brands Private Ltd நிறுவனத்தின் நிறுவனர் ராபின் உத்தப்பா மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தி இந்து செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பின்படி, ராபின் உத்தப்பா கடந்த ஆண்டு முதலே இந்தியாவில் இல்லை என்றும் , அவர் தனது குடும்பத்துடன் துபாயில் செட்டில் ஆகிவிட்டார் என்றும் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்