டெல்லி நாடாளுமன்றம் மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? என்பது குறித்த ஓர் அலசல்.
மாநிலங்களவை தேர்தல்:
நாடாளுமன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஏ.கே.அந்தோணி, ஆனந்த் சர்மா உள்பட 13 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அந்த காலியிடங்களை நிரப்ப இம்மாதம் 31-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, பஞ்சாப்பில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, இமாசல பிரதேசம், திரிபுரா, நாகாலாந்தில் தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் நடக்கிறது. 31-ம் தேதி தேர்தல் முடிந்தவுடன் அதே நாள் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன?
இந்திய நாடாளுமன்றம் என்று சொல்லும்போது, லோக் சபா (மக்களவை), ராஜ்யசபா (மாநிலங்களவை) மற்றும் ஜனாதிபதி இவர்கள் மூன்று பெரும் சேர்ந்த அமைப்புதான் இந்திய நாடாளுமன்றம் என்பதாகும். இந்த நிலையில், மக்களவை – மாநிலங்களவை வித்தியாசம் என்ன? என்பது குறித்து பார்க்கலாம். இந்திய நாடாளுமன்றம் ஒரு வருடத்தில் மூன்று முறை கூடுகிறது. முதலில் கூடுவது பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி முதல் மே மாதம் வரை நடைபெறும். இரண்டாவது மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெறும். மூன்றாவது குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் முதல் டிசம்பர் வரை நடைபெறும்.
மக்களவை – Lok Sabha:
மக்களவை எம்பி 25 வயது நிரம்பியிருக்க வேண்டும். மக்களவை எம்பி ஓட்டு போட்டு மக்களால் தேர்வு செய்யப்படுவர். இந்திய நாடாளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 790, இதில் மக்களவையில், மக்களால் தேர்வு செய்யப்படுவர்கள் எண்ணிக்கை 543, ஆங்கிலோ இந்தியன் சமூகத்தின் இருந்து ஜனாதிபதி நியமிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 என மொத்தம் 545 மக்களவை எம்பிக்கள் என்பதாகும். மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்தே எம்பிக்கள் எண்ணிக்கை இருக்கும். மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். மக்களவைக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
மாநிலங்களவை -Rajya Sabha:
மாநிலங்களவை எம்பி 30 வயது நிரம்பியிருக்க வேண்டும். மாநிலங்களவை எம்பி, எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்படுவர். மாநிலங்களவை எம்பிகளை நேரடியாக ஓட்டு போட்டு மக்கள் தேர்வு செய்ய முடியாது. மாநிலங்களைவையில் மொத்தம் 245 ஆகும். இதில் மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பும் எம்பிக்கள் எண்ணிக்கை 233, மற்ற 12 எம்பிகளை இந்திய ஜனாதிபதி நியமனம் செய்வார். குடியரசு தலைவருக்கு இந்த அதிகாரம் உள்ளது என கூறப்படுகிறது.
மாநிலங்களின் மக்கள் தொகையை பொறுத்தே எம்பிக்கள் எண்ணிக்கை இருக்கும். மாநிலங்களவை எம்பிக்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள். இரண்டி ஆண்டுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அதாவது மூன்றில் ஒரு பங்கு எம்பி சீட்டுகளுக்கு 2 வருடத்திற்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். அவை கலைக்கப்படாமல் எப்போதும் இருக்கக்கூடிய வகையில் தேர்தல் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…